இந்தோனேசியாவில் திடீர் நிலச்சரிவு - 2 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தோனேஷியா நாட்டில் கடந்த சில நாட்களாக  தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள போகோர் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலச்சரிவில் ஏராளமான மக்கள் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் உள்ளிட்டவைச் சரிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த மக்களை பாதுகாப்பாக தங்குவதற்காக முகாம்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், நான்கு பேரை காணாமல் போனதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று கருதப்படுகிறது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died in indonesiya for land slide


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->