யூத வழிபாட்டு தலத்தில் கத்திக்குத்து: 02 பேர் உயிரிழப்பு; 03 பேர் படுகாயம்..!
Two people killed in stabbing at Jewish place of worship in Britain
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரின் கிரம்ப்சால் என்ற பகுதியில் யூத வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. யூதர்களின் புனித தினத்தை முன்னிட்டு அந்நாட்டு நேரப்படி காலை 09:30 மணியளவில் அங்கு பலர் கூடி வழிபாடு நடத்தினர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வழிபாட்டில் ஈடுபட்டு இருந்தவர்கள் மீது கத்தியால் குத்தத் தொடங்கியுள்ளார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தில் 05க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், தற்போது, 02 பேர் உயிரிழந்ததாகவும், 03 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகள் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர் என சந்தேகிக்கப்படுவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதனையடுத்து, அந்த பகுதிக்கு ஆம்புலன்சுகளுடன் விரைந்த மீட்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளதோடு, சம்பவம் நடந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்கும்படி பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த இடத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.
English Summary
Two people killed in stabbing at Jewish place of worship in Britain