இனி ட்விட்டரில் 'ப்ளூ டிக்கிற்கு' மாத கட்டணம் வசூலிப்பு.. எவ்வளவு தெரியுமா.? - எலான் மஸ்க் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை கடந்த வாரம் வாங்கினார். எலான் மஸ்க் ட்விட்டர் வாங்கியதை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் டுவிட்டரில் தற்போது விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர். இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடையது என்பதை காட்டுவதற்காக ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீல நிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

இதனையடுத்து ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. அதில் டுவிட்டர் நிறுவனத்தில் அதிகாரபூர்வ கணக்கு என்பதைக் குறிக்கும் ப்ளூ டிக்கிற்காக ஒவ்வொரு மாதமும் ரூ. 1600 வசூல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இதனையடுத்து பலரும் அதிருப்தி தெரிவித்து ட்விட் செய்து இருந்தனர். அந்த வகையில் இது குறித்து அமெரிக்க நாவலாசிரியர் ஸ்டீபன் கிங் ட்விட்டர் பதிவில் ஒரு ப்ளூ டிக்கிற்கு 20 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டுமா? நீங்கள் தான் பணம் கொடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் இதற்கு பதில் ட்வீட் செய்த எலான் மாஸ்க் நாங்களும் கட்டணம் செலுத்த வேண்டும் விளம்பரதாரர்களை மட்டுமே ட்விட்டர் முழுமையாக நம்பி இருக்க முடியாது 8 டாலர் என்றால் செலுத்துவீர்களா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் ட்விட்டர் ப்ளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 660 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கட்டணம் செலுத்துவோர் வீடியோ மற்றும் ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவு செய்யலாம் என்றும் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twitter celebrity blue tick Monthly fees announced


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->