ரஷ்யாவின் தொடர் தாக்குதல்.! கிழக்கு உக்ரைனில் இருந்து சுமார் 20 லட்சம் பேர் வெளியேற்றம்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவின் தொடர் தாக்குதல் கிழக்கு உக்ரைனில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையான போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய படைகள் கிழக்கு மாகாணத்தை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே உக்ரைனின் கிழக்கு பகுதியான லுகான்ஸ்க் பகுதியில் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

மேலும் டான்பாஸ் பகுதியை இணைக்கும் பாலத்தை ரஷ்யப் படைகள் தகர்த்ததின் மூலம் அப்பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக டொனெட்ஸ்க், டான்பாஸ் மற்றும் லுகான்ஸ்க் பகுதியைச் சேர்ந்த 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twenty lakh people evacuated from eastern ukraine


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal