என்டிஏ அரசியல் நகர்வில் திருப்பமா ...? - இபிஎஸ்-நயினார் நாகேந்திரன் நாளை முக்கிய ஆலோசனை
Is this turning point NDA political strategy EPS and Nainar Nagendran hold important discussions tomorrow
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இடையே நாளை காலை முக்கிய அரசியல் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.
குறிப்பாக ஜனவரி 23-ம் தேதி என்டிஏ கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், இந்த பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், கூட்டணி முடிவு, எதிர்கால அரசியல் திசை, தேர்தல் வியூகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Is this turning point NDA political strategy EPS and Nainar Nagendran hold important discussions tomorrow