End of Ceasefire; பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஈரான் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது; ட்ரம்ப் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


பேச்சுவார்த்தை மேற்கொள்வது குறித்து ஈரான் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இருப்பினும் இருதரப்புக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டு கூறியுள்ளதாவது;

''பேச்சுவார்த்தையை தொடர ஈரான் எங்களிடம் கோரியது. அதை நாங்களும் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆனால், போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர்களிடம் தெளிவாக அமெரிக்கா சொல்லியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார். இருப்பினும் இது குறித்து விரிவான விளக்கத்தை அவர் வெளியிடவில்லை.

கடந்த மாதம் 17-ஆம் தேதி, ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தொடர்​பான அமைதி ஒப்​பந்​தம் ஏற்​பட்​டது. அந்த ஒப்பந்தத்​தில் 14 அம்​சங்​கள் இடம்​பெற்​றன. அதில், இரு தரப்பு போர் நிறுத்தம், கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்​துக்கு ஹார்​முஸ் ஜலசந்தி திறப்​பு, ஈரான் மீதான தடைகள் நீக்​கம் உட்பட 14 அம்​சங்​கள் இடம்​பெற்​றன.

இதையடுத்​து, ஹார்​முஸ் ஜலசந்தி கப்​பல் போக்​கு​வரத்​துக்கு திறந்து விடப்​பட்​டது. எனினும், ஈரான் கடலோர பகு​தி​யில் உள்ள வழித்​தடத்​தில்​தான் செல்ல வேண்​டும் என்றும், ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடந்து சென்​றால் தாக்​குதல் நடத்தப்படும் என்று ஈரான் தொடர்ந்து எச்​சரிக்கை விடுத்தது.

இந்​நிலை​யில், மார்​ஷல் தீவு எண்​ணெய் கப்​பல் அல் ரெஹா​யத், சவுதி கப்​பல் வெட்​யான், லைபீரியா கப்​பல் சைப்​ரஸ் ப்ராஸ்​பெரிட்டி ஆகிய 03 எண்​ணெய் கப்​பல்​கள் ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடந்தன. அவற்​றின் மீது ஈரான் ராணுவத்​தினர் திடீரென தாக்​குதல் நடத்​தியாதல் மீண்டும் பதற்றம் நிலவியது.

அதற்கு பதிலடி​யாக ஈரானின் துறை​முக நகரங்​கள் பந்​தர் அப்​பாஸ், சிரிக், கேஷ்ம்ப் தீவு உட்பட 80 இடங்​களில் அமெரிக்கா நேற்று முன்​தினம் குண்டு வீசி தாக்​குதல் நடத்​தி​யது. இந்த தாக்குதலில், வான் பாது​காப்​புக் கருவி​கள், ரேடார் மையங்​கள், ஏவு​கணை தளங்​கள், 60-க்​கும் மேற்பட்ட கடற்​படை படகு​கள் அழிக்​கப்​பட்​ட​தாக அமெரிக்க ராணுவ கட்​டுப்​பாட்டு மையம் சென்ட்​காம் அறிவித்தது.

அத்துடன், அமெரிக்​கா​வின் தாக்​குதலுக்​குப் பதிலடி​யாக பஹ்ரைன், குவைத் மற்​றும் இதர வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​ய நிலையில், வளை​குடா நாடு​களில் மீண்​டும் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump announces that the US has accepted Irans request for talks


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->