அமெரிக்காவில் சோகம்: மாயமான கர்நாடக மாணவர் சடலமாக மீட்பு!
Tragedy Strikes in San Francisco Missing Indian Student Found Dead
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீநிவாசய்யா, புகழ்பெற்ற யூ.சி. பெர்கேலே (UC Berkeley) பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வந்தார்.
கடந்த பிப்ரவரி 14, 2026 அன்று சாகேத் திடீரென மாயமானார். இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சான் பிரான்சிஸ்கோ போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தேடுதல் பணியின் முடிவில், சாகேத் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவரது மரணத்திற்கான காரணம் குறித்துப் போலீஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவரின் குடும்பத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தூதரகம், பின்வரும் உதவிகளை உறுதி செய்துள்ளது:
உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மரணம் குறித்த விசாரணை துரிதப்படுத்தபட்டுள்ளது. மாணவரின் உடலைத் தாயகம் கொண்டு வரத் தேவையான அனைத்துச் சட்ட ரீதியான மற்றும் போக்குவரத்து உதவிகளைச் செய்தல்.
அயல்நாட்டில் கல்வி பயிலச் சென்ற இடத்தில் இந்திய மாணவர் ஒருவருக்கு நேர்ந்த இந்தத் துயரம், வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே பெரும் சோகத்தையும் பாதுகாப்புக் குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tragedy Strikes in San Francisco Missing Indian Student Found Dead