களைகட்டத் தொடங்கிய கிறிஸ்துமஸ்.! பெத்லகேமில் குவியும் சுற்றுலா பயணிகள்.! - Seithipunal
Seithipunal


பாலஸ்தீனத்தில் மேற்கு கரையில் அமைந்துள்ள பெத்லகேம் நகரம் ஏசுநாதரின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இயேசுநாதரின் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்துமஸ் இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பெத்லகேம் நகரில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ளது.

உலகெங்கிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவியத்தொடங்கியுள்ளனர். ஹோட்டல்களில் முன்பதிவு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஹோட்டல் அதிபர்களின் சங்கத் தலைவர் எலியாஸ் அர்ஜா, தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடு இல்லாத நிலையில், இங்குள்ள புனித தலங்களுக்கு வருவதற்கு சுற்றுலா பயணிகளிடையே ஆவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் புனித தலங்களை காண்பதற்கு கிறிஸ்தவ மத சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும் எனவும், இந்த ஆண்டு எங்களின் தொழில் சிறப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tourist gathered in bethleham as Christmas begins


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->