நைஜரில் கொடூரம்; கிராமத்துக்குள் நுழைந்து ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்குதல்; 37 பேர் பலி; பெண்கள், குழந்தைகள் கடத்தி சென்றதால் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவுடன் எல்லையைப் பகிரும் அண்டை நாடு நைஜர். இந்த நைஜர் நாட்டின் போர்கு பகுதியில் கிராமத்தில், ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 14 குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், பெண்கள், குழந்தைகள் என பலரும் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்நாட்டு போலீசார் தெரிவிக்கையில் நைஜரின் போர்கு பகுதியில் அமைந்துள்ள கசுவான் - தஜி கிராமத்தில் நேற்றுமுன்தினம்  மாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் கிராமவாசிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதோடு, அங்குள்ள மார்க்கெட் மற்றும் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில், 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பல கிராம மக்களை குறித்த கும்பல் கடத்தி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அங்கு பதற்றத்தை தணிப்பதற்காகவும், கடத்திச் சென்றவர்களை மீட்பதற்காகவும் பாதுகாப்பு படையினர் கசுவான் -தஜி கிராமத்திற்கு அனுப்பப்பட்டதாக போலீசார் மேலும், கூறியுள்ளனர்.

ஆனால், பாதுகாப்பு கொடுத்ததாக போலீசார் வெளியிட்ட இந்த தகவலை கிராம மக்கள் மறுத்துள்ளனர். அதாவது, சம்பவம் நடந்து மறுநாளாகியும், பாதுகாப்பு படையினர் யாரும் வரவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளனர் . 

மேலும், மர்ம நபர்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்ததாகவும், பெண்கள், குழந்தைகள் என பலர் கடத்தி செல்லப்பட்டு இருப்பதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும் கிராமவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirty people were killed in an attack by an armed group in the Tillaberi region of Niger


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->