மூன்றாம் வெப்ப அலையை நோக்கி ஜெர்மனி.! நாளுக்கு நாள் உயரும் வெப்பநிலை - Seithipunal
Seithipunal


கடந்த ஒரு மாத காலமாக காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் காரணமாக உலகின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் நடப்பாண்டில் வெப்ப அலையின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. 

இதனால் அங்கு சராசரி வெப்பநிலை உயர்ந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் பல இடங்களில் காட்டுத்தீ பற்றி எரியும் நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜெர்மனியில் நாளுக்கு நாள் வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு பெர்லின் மற்றும் பிராண்டன்பர்க் நகரங்களில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதையடுத்து ஜெர்மனியில் மூன்றாம் வெப்ப அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் பல்வேறு இடங்களில் இயல்பு நிலையை விட வெப்ப நிலை அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடும் வெப்பநிலையை சமாளிக்க மக்கள் நீரூற்றுகளுக்கு சென்றும், ஐஸ்கிரீம் சாப்பிட்டும் வெப்பத்தை தனித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Third heat wave in Germany


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal