அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிரிக் படுகொலை: வாலிபரை கைது செய்துள்ள எப்பிஐ போலீசார்..!
The young man murdered US President Trump supporter Charlie Kirk has been arrested
அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், 31, பல்கலைக்கழகத்தில் உரையாற்றி கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். அமரிக்கவை உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து, துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் கைது சுதேய்த்துள்ளனர். அத்துடன், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என டிரம்ப் உறுதி செய்துள்ளார்.
அமெரிக்காவின் யூடா மாகாணம், ஓரெம் நகரில் உள்ள யூடா வேலி பல்கலைக்கு நேற்று முன்தினம் சார்லி கிர்க் சென்று, அங்கு கல்லுாரி மாணவர்களிடையே குடியரசு கட்சிக்கு ஆதரவு திரட்டும் 'அமெரிக்கன் கம்பேக் டூர்' பிரசார இயக்கத்தை நடத்தினார். அவரது பேச்சை கேட்க நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு இருந்தனர்.

அப்போது, அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி வன்முறை கலாசாரம் குறித்து பார்வையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதில், கழுத்தில் குண்டுபாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தற்போது குற்றவாளியின் புகைப்படம் மற்றும் சம்பவ இடத்தில் இருந்து அவர் தப்பியோடும் வீடியோ காட்சிகளை வெளியிட்ட எப்பிஐ போலீசார், தகவல் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என அறிவித்தது.
இந்நிலையில் சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்றதில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் குற்றவாளியை கைது செய்து விட்டதாக அதிபர் டிரம்ப் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதனிடையே, குற்றவாளி கைது செய்யப்பட்டது குறித்தும், அவரின் விபரம் குறித்தும் போலீசார் விரைவில் பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
The young man murdered US President Trump supporter Charlie Kirk has been arrested