தொண்டு நிறுவனங்களில் ஆப்கன் பெண்கள் பணியாற்ற தடை.! ஐநா மற்றும் அமெரிக்கா கவலை.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை அமைத்தபின், பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் மற்றும் தடைகளை விதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் அனைத்து தொண்டு நிறுவனங்களிலும் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு ஐநா மற்றும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா வெளியுறவுதுறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் ஆப்கானிஸ்தானில் பெண்களின் மீதான தடை, கோடிக்கணக்கான பெண்களுக்கு கிடைத்து வரும் வாழ்வியல் மற்றும் உயிர் காக்கும் உதவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், மனிதாபிமான ஈடுபட்டு வரும் பெண்களின் மீது தடை விதித்தால் அது ஆப்கன் மக்களுக்கு பேரழிவு ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நாவும் அதன் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு உதவிகளை ஆப்கானிஸ்தானில் செய்து வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு பணியாற்ற தடை விதித்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The UN and the United States are concerned about the prohibition of Afghanistan women working in NGO


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->