சபரிமலைக்கு வரும் இலங்கை பக்தர்கள்: அந்நாட்டு அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு..! - Seithipunal
Seithipunal


கேரளாவின் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை விழா நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெகு விமர்சையாக பக்தி சிரத்தையோடு நடைபெறும். பின்னர் ஜனவரியில் மகரவிளக்கு காலத்தில் யாத்திரைக்காக கோவில் திறக்கப்படுகிறது. இந்த புனித யாத்திரை காலம் முடிந்ததும் சபரிமலை நடைபாதை மூடப்படும். இந்த காகக்கட்டத்தில் உலகமுழுவதும் இருந்து ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் விரதம் இருந்து மாலை போட்டு, இருமுடி கட்டி வருகின்றனர். 

அதிலும் குறிப்பாக நமது அண்டைய நாடனை இலங்கை தீவில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருகின்றனர். இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அந்நாட்டு பக்தர்கள் செல்வதை புனித யாத்திரையாக அங்கீகரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

அதாவது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதியேற்றுள்ள அனுர குமார திஸாநாயக்க அமைச்சரவை, ஒஇது குறித்து முக்கிய அறிவிப்பை அறிக்கை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. இந்த முடிவு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டததாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கை அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இலங்கை பக்தர்கள், நீண்ட காலமாக கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 01 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை மண்டல பூஜை விழா மற்றும் மகரவிளக்கு உள்ளிட்ட யாத்திரைகளுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வழிபட்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில், ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் யாத்திரையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் மத பிணைப்பை அங்கீகரிக்கிறது. இனி சபரிமலை யாத்திரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விழாவாக கருதப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Sri Lankan government has taken an important decision regarding the Sri Lankan devotees visiting Sabarimala


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->