இந்திய வம்சாவளியான பிரிதம் சிங், எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கம்; சிங்கப்பூர் பிரதமர் நடவடிக்கை..! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூர் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளரான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிதம் சிங்கை, சிங்கபூர் பிரதமர் லாரன்ஸ் வாங், எதிர்க்கட்சி பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "இந்த விஷயத்தை கவனமாகப் பரிசீலித்த பிறகு, பிரிதம் சிங்கின் குற்றவியல் தண்டனைகளும், அவர் அந்த பதவிக்குத் தகுதியற்றவர் என்பது குறித்த நாடாளுமன்றத்தின் ஆழமான கருத்தும் சேர்ந்து, அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் கருத்தும் சேர்ந்து, அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வது இனி சாத்தியமில்லை என்று நான் முடிவு செய்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தொழிலாளர் கட்சியான, எதிர்க்கட்சி உடனடியாக மாற்று எதிர்க்கட்சி தலைவரை நியமனம் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளார். 49 வயதாகும் பிரிதம் சிங், முன்னாள் எம்.பி. ரயீஷா கான் வழக்கில், பாராளுமன்ற நிலைக்குழு முன் பொய் கூறியா நிலையில், அவரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. அத்துடன் அவருக்கு 10,700 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Singaporean Prime Minister has removed the opposition leader of Indian origin from his position


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->