இலங்கையை உலுக்கிய 'எல்ல' விபத்து: 23 வருடங்களுக்கு முன்பு அதே நாளில் அதே இடத்தில் நடந்த கொடூரம்..!
The Ella accident that shook Sri Lanka was a horrific incident that happened on the same day and in the same place 23 years ago
இலங்கையின் ஊவா மாகாணம், எல்ல - வெல்லவாய பிரதான சாலையில் நேற்று இரவு (04.09.2025) பயணிகள் பேருந்து பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பேருந்தில் பயணித்த 34 பேரில் 15 பேர் உயிரிழந்ததோடு, 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், ஒருவரை தற்போது வரை காணவில்லை என கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்தவர்களை மீட்கச் சென்ற இலங்கை இராணுவத்தின் இரண்டாவது சிறப்புப் படையை சேர்ந்த அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
எல்ல பகுதியைச் சேர்ந்த அவர் விடுமுறைக்கு வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த நிலையில், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது 1000 அடிக்கும் அதிகமான பாறையில் கவிழ்ந்திருந்த பேருந்தில் இருந்தவர்களை மீட்பதற்காக பிரதேச மக்களுடன் சேர்ந்துஐவரும் கீழே இறங்கி மீட்பு பணியை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த சரிந்து விழுந்த கல்லொன்று அவரது முகத்தில் விழுந்துள்ளது. டிப்பர் வாகனமொன்றை முந்தி செல்ல முற்பட்ட போதே குறித்த விபத்து ஏற்பட்டதாக எல்ல வெல்லவாய பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்தின் நடத்துனர் தெரிவித்துள்ளார். அத்துடன், தனக்கு நடந்த அனைத்து விடயங்களும் நினைவில் இல்லை எனவும் அவர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுக்கொன்னு வரும் நிலையில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, பேருந்து வேகமாக சென்றதா என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அந்தளவு வேகமாக பேருந்து பயணிக்கவில்லை என அவர் கூறியுள்ளார். பேருந்து விழுவதற்கு சிறிது நேரத்திற்கு முன், பிரேக் செயலிழந்து விட்டதாக ஓட்டுநர் கூறிய போது, நடத்துனர் உட்பட பயணிகள் அனைவரும் சிரித்ததாக குறித்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சில பயணிகள், ஓட்டுனரை பார்த்து பொய் கூற வேண்டாம் என கூறியதாகவும், அதனையடுத்து, உண்மையில் பிரேக் செயலிழந்ததை பயணிகள் உணர்ந்துகொண்டதாகவும் கவலையுடன் கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த எல்ல பகுதியில் 23 வருடங்களுக்கு முன்னர் நடந்த விபத்துடன் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்துவதாக சமூக ஊடகங்களில் கூறப்படுகிறது. கடந்த 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி 24-வது மைல் கல்லில் ஒரு பேருந்து பள்ளத்தில் விழுந்து 21 பேர் உயிரிழந்தனர்.
நேற்றையதினம் நடந்த விபத்தும் அதே பகுதியில் நடந்துள்ளது. இரண்டு விபத்துகளிலும் பேருந்து, பள்ளத்தில் சரிந்து வீழ்ந்த காரணத்தினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இரண்டு விபத்துக்கள் ஒரே நாளில் நடந்திருப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
The Ella accident that shook Sri Lanka was a horrific incident that happened on the same day and in the same place 23 years ago