மரபியலின் தந்தை' திரு.கிரிகோர் மெண்டல் அவர்கள் பிறந்ததினம்!.
The birthday of the father of genetics Mr Gregor Mendel
மரபியலின் தந்தை' திரு.கிரிகோர் மெண்டல் அவர்கள் பிறந்ததினம்!.
மரபியலின் தந்தை கிரிகோர் யோஹன் மெண்டல் 1822ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி ஆஸ்திரியப் பேரரசின் ஹெய்ன்சன் டார்ஃப் நகரில் (இன்றைய செக் குடியரசு) பிறந்தார்.
சிறுவயதிலிருந்தே இவருக்கு மரபுப் பண்புகள் ஆராய்ச்சிகளில் ஆர்வம் அதிகமாக இருந்தது. எனவே தனது தோட்டத்தில் பட்டாணிச் செடிகளை வளர்த்து ஆராய்ச்சி செய்து வந்தார்.
மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவதைக் கண்டறிந்தார். இவையே மெண்டலின் விதிகள் எனப்படுகின்றன.
உயிர் அறிவியலின் அடிப்படையைக் கண்டறிந்த மெண்டல் 62வது வயதில் ஜனவரி 6 ஆம் தேதி 1884 அன்று மறைந்தார்.

வானொலியின் தந்தை" திரு.மார்க்கோனி அவர்கள் நினைவு தினம்!.
மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi; ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர்.
இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.
English Summary
The birthday of the father of genetics Mr Gregor Mendel