தாய்லாந்து சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து.. 13 பேர் உடல்கருகி பலி.! - Seithipunal
Seithipunal


தாய்லாந்தில் மது பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உடல்கருகி பலியாகினா்.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்குக்கு 160 கி.மீ. தொலைவிலுள்ள சோன்புரி மாகாணத்தில் ஏற்பட்ட இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கேளிக்கை விடுதியின் இசை மேடையின் ஒரத்தில் தீப்பிடித்து புகை மண்டலம் எழுந்ததாகவும் அதற்கு முன்னதாக வெடியோசை கேட்டதாகவும் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

இசை நடன நிகழ்ச்சிகளின்போது, வெளியில் சப்தம் கேட்காமல் இருப்பதற்காக அந்த கேளிக்கை முழுவதும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களால் ஒலித்தடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் தீ அதிவேகமாகப் பரவியதாக போலீஸாா் கூறினா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thailand bar fire 13 people death


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal