மீண்டும் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் வான்தாக்குதல் அதிர்ச்சி...! - ஆப்கானிஸ்தான் எல்லையில் 20 பயங்கரவாதிகள் பலி
Tensions rise again Pakistan Army airstrikes shock 20 terrorists killed Afghan border
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இன்று அதிகாலை பதற்றம் நிலவியது. பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படும் முகாம்களை குறிவைத்து குண்டுவீச்சு நடத்தியது.

இந்தத் துல்லியத் தாக்குதலில் சுமார் 20 ஆப்கான் பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த ஆயுதக் குழுக்களின் மறைவிடங்களை அழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
அண்மைக்காலமாக பாகிஸ்தானுக்குள் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த வான்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இந்த ராணுவ நடவடிக்கை இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் பதற்றமடையச் செய்யும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதால், எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நிலை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
Tensions rise again Pakistan Army airstrikes shock 20 terrorists killed Afghan border