தொகுதி பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள தி.மு.க...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக, இன்று தொடங்கியுள்ளது. .
இந்த தேர்தலில் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஏறக்குறைய கூட்டணியை இறுதி செய்து விட்டன. ஏனைய சிறு கட்சிகளும் வரும் நாட்களில் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

இந்நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில்0 7 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அதன்படி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. இன்று பேச்சுவார்த்தையை தொடங்கியது.

திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில், இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சியுடன் முதலாவதாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது. அதன் படி,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தலைமையிலான 05 பேர் கொண்ட குழு இன்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  திமுக கூட்டணியில் இடம் பெற்றது. அப்போது  கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 03 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 05 தொகுதிகளை கேட்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் புதிதாக இணைந்துள்ளன. இந்நிலையில், கட்சிகள் கேட்கும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வருமா என்பது கேள்வி குறியாகியுள்ளது. 

அடுத்ததாக, நாளை, ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சியுடன் நாளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வரும் 26-ந்தேதியும்  பேச்சுவார்த்தைக்கு தி.மு.க. அழைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK has started talks with Indian Union Muslim Party regarding constituency sharing


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->