டொனால்ட் டிரம்ப் அதிரடி முடிவு: நீதிமன்ற தடைக்கு பிறகும் 15% புதிய உலக வரி அறிவித்த அதிர்ச்சி...!
Donald Trump dramatic decision Shocking announcement new 15percentage global tax even after court ban
டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு பரஸ்பர வரிகளை விதித்து அதிரடி முடிவை எடுத்தார். சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன் கீழ் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது.

இந்த வரி விதிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சட்டப்போராட்டம் தொடுக்க, வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், அதிபரின் பரஸ்பர வரி விதிப்பு சட்டத்துக்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்து, அந்த உத்தரவை ரத்து செய்தது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த டிரம்ப், நீதிபதிகளை வெளிப்படையாக விமர்சித்ததுடன், மாற்று சட்ட அதிகாரங்களை பயன்படுத்தி புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 122-ன் கீழ், அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக முதலில் அறிவித்த அவர், பின்னர் அதை 15 சதவீதமாக உயர்த்தினார்.
மேலும், பரஸ்பர வரிகளை மீண்டும் கொண்டு வர சட்டரீதியான வழிகள் குறித்து தனது நிர்வாகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். தனது சமூக வலைதள பதிவில், “அமெரிக்காவை பல ஆண்டுகளாக சுரண்டி வரும் நாடுகளுக்கு எதிராக சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வரியை உடனடியாக அமல்படுத்துகிறேன்.
உச்சநீதிமன்றத்தின் முடிவை முழுமையாக ஆய்வு செய்த பிறகே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னணியில் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
ஆனால், புதிய 15 சதவீத உலகளாவிய வரி அமலுக்கு வந்ததால், இந்தியப் பொருட்களுக்கு மொத்தமாக சுமார் 18.5 சதவீத வரி வசூலிக்கப்படும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
Donald Trump dramatic decision Shocking announcement new 15percentage global tax even after court ban