கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதியில் உரிமையாளர் படுகொலை; தப்பிச்சென்ற குற்றவாளிகள்; மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தேடுதல் வேட்டை..!
Police use sniffer dogs to search for suspects who escaped after killing owner at private lodging in Kodaikanal
கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதியில் உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலை செய்துவிட்டு தப்பி சென்ற குற்றவாளிகளை மோப்ப நாய் உதவியுடன் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஹைதராபாத் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சூரிய நாராயணன் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே சொந்தமான தங்கும் விடுதி வைத்துள்ளார் .
சூரிய நாராயணனுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் கடந்த இரண்டு தினங்களாக, கோயம்புத்தூரை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 06 மணி அளவில் சூரிய நாராயணன் அவரது தங்கும் விடுதியில் பணியாற்றி வந்த சக பணியாளர்கள் தங்களது வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், தங்கும் விடுதியில் சூரிய நாராயணன் மற்றும் இரண்டு கேர் டக்கர்கள் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை நோட்டமிட்ட குறித்த ஐந்து நபர்கள் கேர் டக்கர் இரண்டு நபர்களையும் கயிற்றால் தூண் மற்றும் ஜன்னல்களில் கட்டி வைத்து விட்டு சூரிய நாராயணனை கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் கேர் டேக்கர் ஒருவர் தன்னை கட்டி வைத்த கயிறை அவிழ்த்து அப்பகுதியில் இருந்து தப்பித்து வெளியே சென்று கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்களின் செல்போனில் இருந்து கொடைக்கானல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வருவதற்கு முன் குற்றவாளிகள் தப்பி சென்றுள்ளனர். அத்துடன், அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் சிசிடிவி, செல்போன் என்பனவற்றை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கொலையாளிகள் யார் என தெரியாமல் உள்ள நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதிப் தலைமையில் 50 மேற்பட்ட சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . தேடுதலின் அடுத்த கட்டமாக மோப்ப நாயகிகளின் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், சூரிய நாராயணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனியார் தங்கும் விடுதியின் உரிமையாளர் கொல்லப்பட்டது கொடைக்கானல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Police use sniffer dogs to search for suspects who escaped after killing owner at private lodging in Kodaikanal