குரூப்-2 தேர்வு குழப்பத்துக்கு முடிவு: ரத்து செய்யப்பட்ட முதன்மைத் தேர்வு இன்று மீண்டும்…! -தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - Seithipunal
Seithipunal


சார் பதிவாளர் நிலை-2,உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர்,தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர்,  தனிப்பிரிவு உதவியாளர், உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர்,உதவிப்பிரிவு அலுவலர், வனவர் உள்ளிட்ட குரூப்-2 பணியிடங்களுக்கும், முதுநிலை ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் உள்ளிட்ட குரூப்-2ஏ பதவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 828 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது.

இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 4,20,217 தேர்வர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்பட்டதில், குரூப்-2-க்கு 1,126 பேரும், குரூப்-2ஏ-க்கு 9,457 பேரும் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு இந்த மாதம் 8-ஆம் தேதி நடத்தப்படவிருந்தது. தமிழகம் முழுவதும் 38 மையங்களிலும், சென்னையில் மட்டும் 7 மையங்களிலும் தேர்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், ஹால் டிக்கெட்டுகளில் தவறான விவரங்கள் இடம்பெற்றதால் குழப்பம் ஏற்பட்டது.

சென்னை அரும்பாக்கம் உள்ளிட்ட சில மையங்களுக்கு வந்த தேர்வர்கள் அதிருப்தியடைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நிர்வாகம் முழு தேர்வையும் ரத்து செய்து, பின்னர் மறுதேதி அறிவித்தது.இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு இன்று மாநிலம் முழுவதும் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆயிரக்கணக்கான தேர்வர்கள் புதிய உற்சாகத்துடன் தேர்வு மையங்களுக்கு வந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

End Group 2 exam confusion Cancelled main exam held again today Tamil Nadu Public Service Commission


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->