ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது; தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; எங்கெல்லாம் தெரியுமா..?
Heavy rains likely in Tamil Nadu as deep depression strengthens
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவானது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Heavy rains likely in Tamil Nadu as deep depression strengthens