'பதவிக்காக தீய சக்திகளுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்தார்… அதிமுக பாரம்பரியத்துக்கு களங்கம்'...! -டி.டி.வி. தினகரன் கடும் விமர்சனம்
ops joined forces evil forcessake office stain AIADMK tradition TTV Dhinakaran strongly criticizes
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தினார்.
அவர் தெரிவிக்கையில்,"சட்டமன்றத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், அவருக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ. ஐயப்பன் பேசியதை கவனித்ததாக தெரிவித்தார்.

கடந்த 30 ஆண்டுகளாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உடன் தொடர்பு கொண்டிருந்த ஓ.பி.எஸ்., தனிப்பட்ட விருப்பப்படி எந்தக் கட்சியிலும் சேர்வதற்கான உரிமை கொண்டவர்தான் என்றாலும், சட்டமன்றத்திலேயே ஆதரவு எம்.எல்.ஏ-வை பேசவைத்து எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பெருமைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார் என விமர்சித்தார்.
மேலும், சுயநல அரசியல் முயற்சிகள் பலனளிக்காததால், ஓ.பன்னீர்செல்வம் தீய சக்திகளுடன் இணைந்து செயல்படுகிறார் என்றும், பதவி ஆசைக்காக எதையும் செய்யத் தயங்காத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.
English Summary
ops joined forces evil forcessake office stain AIADMK tradition TTV Dhinakaran strongly criticizes