ரஷ்யாவிற்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மாணவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


ரஷியா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவுபெற உள்ளது. இந்த போருக்கு, ஆரம்பத்தில் இருந்தே ரஷியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நாட்டின் அதிபர் புதின் தலைமையிலான அரசு தண்டனை விதித்து வருகிறது. 

இந்த நிலையில், ரஷியாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் நகரை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒலேஸ்யா என்பவர், போர் குறித்து ரஷியாவுக்கு எதிராக பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார். 

அந்த பதிவோடு போரில் ரஷியாவை விமர்சிக்கும் வகையில் தனது நண்பர்கள் பதிவிட்ட பதிவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தொடர்பாக  ஒலேஸ்யாவை போலீசார் கைது செய்து, அவரை வீட்டு சிறையில் வைத்தனர்.

அதுமட்டுமல்லாமல், அந்த மாணவியின் காலில் 'எலக்ட்ரானிக் டேக்' பொருத்தி அவருடைய ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வருகின்றனர். மேலும் அவருக்கு செல்போனில் பேசவும், இணையதளத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, மாணவி ஓலேஸ்யா மீது பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியதாகவும், ரஷிய ஆயுதப் படைகளை இழிவுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ten years jail penalty chance to russia student for against russia war


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->