அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் தமிழக முதல்வர்! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று அரசு முறை பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக பயணம் மேற்கொண்டார்.

இந்த அரசு முறை பயணத்தின்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

இதனை தொடர்ந்து, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் நேரில் சந்தித்து தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அரசு முறை பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சிகாகோ விமான நிலையத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அங்கு சென்னை புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் நேரில் சென்று தமிழக முதல்வரை வழியனுப்பி வைத்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைக்கு நன்றி கூறும் வகையில் சிகாகோ விமான நிலையத்தில் திமுக கட்சி கொடி மற்றும் பதாகைகள் ஏந்தி அமெரிக்க வாழ் தமிழர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Chief Minister left for Chennai from America


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->