"இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு"-ஜெர்மனியில் முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Tamil Nadu as India Germany Chief Minister MK Stalin speaking at an investor conference in Germany
ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவாக எடுத்துரைத்தார்.
அவர் பேசியதாவது:“இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளும் தொழிலாளர்களும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. நாட்டிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்று வரும், இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது.”
“ஜெர்மனியின் பொருளாதார வலிமை நவீன உற்பத்தி, பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மோட்டார் வாகன தொழில்நுட்பம். அதேசமயம், 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பயன்படுத்திய வரலாறு கொண்ட தமிழ்நாடு, இத்துறைகளில் புதிய வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள்.”
“தமிழ்நாடு – ஜெர்மனி இடையே பொருளாதார பாலம் அமைக்கவே இந்த விஜயம். தொழில்துறையில் ஐரோப்பாவின் முதுகெலும்பான ஜெர்மனியுடன் இணையும் வாய்ப்பு, இரு தரப்பிற்கும் வளர்ச்சி பாதையை உருவாக்கும்.”
“Made in Tamil Nadu என்பது இன்றைக்கு தரம் மற்றும் திறனை பிரதிபலிக்கும் ஒரு பெயராக உருவாகியுள்ளது. ஜெர்மனியின் துல்லியமும், தமிழ்நாட்டின் ஆற்றலும் ஒன்றிணைந்தால் புதிய வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகும்.”
“தமிழ்நாட்டில் 54 லட்சம் MSME நிறுவனங்களும், முன்னணி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் உள்ளன. இதனால், தமிழ்நாடு உண்மையில் ‘இந்தியாவின் ஜெர்மனி’ என பெருமிதம் கொள்ளும் நிலையில் உள்ளது.”
முதலமைச்சரின் இந்த உரை, ஜெர்மன் முதலீட்டாளர்களிடம் தமிழகத்தின் பொருளாதார வலிமையையும் வளர்ச்சிச் சாத்தியங்களையும் வெளிப்படுத்தியது.
English Summary
Tamil Nadu as India Germany Chief Minister MK Stalin speaking at an investor conference in Germany