தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற பெண்களுக்கு தடை - தாலிபான் அரசு அறிவிப்பு - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை அமைத்தபின், பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றி வருகிறது. மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட அனைத்து தொண்டு நிறுவனங்களிலும் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நிதி அமைச்சர் காரி தின் முகமது ஹனீஃப் நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை பின்பற்றவிட்டால் ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனங்கள் இயங்குவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட செய்தியில், தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று ஏராளமான புகார்கள் பெறப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தடை உத்தரவு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஆப்கன் பெண்களுக்கு மட்டுமா, இல்லை அனைத்து பெண்களுக்கும் பொருந்துமா என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Taliban bans working of women in NGO in Afghanistan


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->