ஓட்டலுக்கு செல்ல ஆப்கான் பெண்களுக்கு தடை..!
Taliban banned women from restaurants
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு, பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றி வருகின்றன. இதில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, பல்கலைக்கழகங்களுக்கு செல்ல தடை, தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு தடை மற்றும் விமானத்தில் ஆண்கள் துணையின்றி செல்ல தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பெண் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது.
தாலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு, ஐ.நா மற்றும் உலக நாடுகள் தொடக்கத்திலிருந்தே கண்டித்து வருவதுடன், பெண்கள் மீதான தடைகளை நீக்க கோரி வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது கட்டுப்பாடுகள் இல்லாத இடங்களை கொண்ட உணவகங்களுக்கு குடும்பங்கள் மற்றும் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தாலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில், பெண்கள் ஹிஜாப் முறையாக அணியாமல் இருப்பதால் இந்த தடை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஆண்கள் பெண்கள் சந்திக்கும் பூங்கா போன்ற பசுமையான பகுதிகளை கொண்ட உணவகங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Taliban banned women from restaurants