சுவீடன்: பதவியேற்ற சில மணி நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்...!
Sweden Shocking incident sudden fainting within hours taking office
சுவீடன் புதிய சுகாதாரத்துறை மந்திரியாக 48 வயதான எலிசபெத் லான் நேற்று பதவியேற்றார். அதைத்தொடர்ந்து பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன், துணை பிரதமர் எப்பா புஷ் ஆகியோருடன் பத்தரிக்கியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

அப்போது திடீரென அவர் மயங்கி தரையில் விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே துணை பிரதமர், பாதுகாவலர்கள் மற்றும் செய்தியாளர்கள் ஓடிச் சென்று அவருக்கு உதவி செய்தனர்.
பின்னர் அவரை அவசரமாக வெளியே கொண்டு சென்று மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.அதன் பிறகு, “ரத்தச் சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டது.
தற்போது உடல்நிலை சீராக உள்ளது” என்று எலிசபெத் லான் விளக்கம் அளித்தார். மேலும், பதவியேற்ற சில மணிநேரத்திலேயே மயங்கிய சம்பவம் சுவீடன் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sweden Shocking incident sudden fainting within hours taking office