கடும் விமர்சனம்! புதின் அழகாக பேசி குண்டுகளை வீசுகிறார்...! - டிரம்ப்
Strong criticism Putin talks nicely and throws bombs Trump
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், இதில் இன்னும் உடன்பாடு எட்டப்படாததால், உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது.

அதற்கு பதிலாக உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகிறது.இதில் ரஷியா மற்றும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், புதினை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதிபர் டிரம்ப்:
மேலும், வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேசிய டிரம்ப் தெரிவித்ததாவது,"புதின் அழகாக பேசுகிறார். ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார்.
உக்ரைனுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா அனுப்ப உள்ளது"என்று தெரிவித்தார். இருப்பினும்,எத்தனை ஆயுதங்கள் வழங்கப்படும் என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
அதேபோல, ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்பதையும் டிரம்ப் அவர்கள் சூசகமாக குறிப்பிட்டார்.
English Summary
Strong criticism Putin talks nicely and throws bombs Trump