இந்தியாவின் பரிந்துரைகள் விரைவில் அமல்படுத்தப்படும் - இலங்கை அதிபர் - Seithipunal
Seithipunal


பணவீக்கம், அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் கடன் அதிகரித்ததால் இலங்கை கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய மறுத்ததால், இந்தியா தேவையான எரிபொருளை இலங்கைக்கு அளித்து வந்தது.

மேலும் அந்நிய செலாவணி நிதியத்திடம் கடனுக்காக இலங்கை வேண்டுகோள் விடுத்தபொழுது மற்ற நாடுகளிடமிருந்து பெறப்பட்ட கடன் பற்றி ஆலோசனை நடத்திய பிறகு கடன் வழங்கப்படும் என்று அந்நிய செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பேச்சு வார்த்தையின் பொழுது இலங்கையின் முன்னேற்றத்திற்காக இந்தியா சார்பில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்தியாவுடனான ஆலோசனை திருப்திகரமாக இருந்ததாகவும், இந்தியா தெரிவித்த பரிந்துரைகள் ஜனவரி இறுதி முதல் அமல்படுத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

சா்வதேச செலாவணி நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டாலா் சில மாதங்களில் கிடைக்கும் என்றும், சீனாவுடனான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் விமானம் மற்றும் தொலைத் தொடர்பு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதன் மூலம் அரசின் வருவாயை பெருக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilankan president says India suggestion executed by January end


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->