இன்று முதல் பள்ளிகள் திறப்பு.. ஆனால் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்.. அரசு அறிவிப்பு.!
Srilanka school reopen on from today
இலங்கையில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது.
இது பலமுறை நீட்டிக்கப்பட்டு கடைசியாக நேற்று வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மூடுவதை அரசு நிறுத்தி உள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், தனியார் பள்
ளிகளும் இன்று (ஜூலை 25) முதல் திறந்து கல்விப்பணிகளை தொடர அரசு அனுமதி அளித்து உள்ளது.
ஆனால் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகளை இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
Srilanka school reopen on from today