உக்ரைன் - ரஷ்யா போர் பதட்டம்.. சிறப்பு விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்தல்.!! - Seithipunal
Seithipunal


உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் பதட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனிடையே தங்கள் படைகளில் ஒரு பகுதியை தாங்கள் திரும்பி பெற்றுக்கொண்டதாகவும், போர் செய்வதற்கு விரும்பவில்லை என்றும் ரஷ்யா தரப்பில் தகவல்கள் வெளியானது. ஆனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த அறிவிப்பை இன்னும் தங்கள் தரப்பு உறுதிப்படுத்தவில்லை என நேற்று தெரிவித்தார். 

மேலும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் அடுத்த சில நாட்களில் நடக்கலாம். ரஷ்ய அதிபர் புதினிடம் பேச்சுவார்த்தை நடத்த எந்த திட்டமும் இல்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்த சற்று நேரத்தில், உக்ரைன்  மீது தாக்குதல் நடத்திய எந்த திட்டமும் இல்லை என ரஷ்யா வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும் படி, இந்திய தூதரகமும் அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு சிறப்பு விமானங்களை இயக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.  உக்ரைன் எல்லையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவிவரும் நிலையில் விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special flights from ukraine to india


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->