தென்கொரியாவின் தற்காலிக அதிபர் ராஜினாமா..அடுத்த தேர்தலில் போட்டியா?
South Koreas interim president resigns Contesting the next election?
நான் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சமாளிக்க என்னால் முடிந்ததைச் செய்வதற்கும், எனக்கு என்ன தேவையோ அதைச் செய்வதற்கும் எனது பதவியைக் கைவிட இறுதியாகத் தீர்மானித்துள்ளேன் எனதென்கொரியாவின் தற்காலிக அதிபர் ஹான் டக் சூ ராஜினாமா குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் ராணுவ அவசர நிலை அறிவித்த விவகாரம் தொடர்பாக தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழ் நிலை உருவானது .அதனை தொடர்ந்து தென்கொரியா நாட்டின் பிரதமர் ஹான் டக்-சூ (70), தற்காலிக அதிபராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் தற்காலிக புதிய அதிபர் ஹான் டக்-சூ தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, துணை பிரதமர் சோய் சாங்மோக் தற்காலிக அதிபராக செயல்படுவார் என அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.மேலும் ஜூன் மாதம் 3-ம் தேதி தென்கொரியா புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த தேர்தலில் பழமைவாத கட்சியான தென்கொரிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஹான் டக் சூ போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராஜினாமா குறித்து ஹான் டக்-சூ கூறுகையில், நான் இப்போது கையாளும் பெரிய பொறுப்பை முடிப்பது. மற்றொன்று அந்தப் பொறுப்பைக் கைவிட்டு, ஒரு பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வது. நெருக்கடிகளைச் சமாளிக்க என்னால் முடிந்ததைச் செய்வதற்கும், எனது பதவியைக் கைவிட இறுதியாகத் தீர்மானித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
South Koreas interim president resigns Contesting the next election?