'ஸ்கை டைவ்' சாகசத்தில் ஈடுபட்ட வீரர் - பாராசூட் விரியாததால் விபரீதம்!          - Seithipunal
Seithipunal


பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் பிரபல 'ஸ்கை டைவர்' நதி ஒடின்சன். இவருடைய ‘Nathy’s Sky Photography’ என்ற முகநூல் பக்கம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களையும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் கொண்டுள்ளது.

இந்த நிலையில் நதி ஒடின்சன், கடந்த 27-ம் தேதி தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள 29 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பகுதியிலிருந்து பாராசூட்டுடன் கீழே டைவ் அடித்துள்ளார். அப்போது, அவர் பாராசூட்டை விரிக்க முயன்ற நிலையில், எதிர்பாராதவிதமாக பாராசூட் விரியவில்லை. இதனால் மிக வேகமாக கீழே விழுந்த நதி ஒடின்சன் தரையில் மோதி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பாதுகாவலர்கள் பேசுகையில், “ஏதே தரையில் விழுந்தது போன்று பலத்த சத்தம் கேட்டது. உடனடியாக அங்கு ஓடிச்சென்று பார்த்தபோது, ஒரு பெண் அழுதுகொண்டிருந்தார். அப்போதுதான் நதி ஒடின்சன் கீழே விழுந்தது தெரியவந்தது" என்றுத் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் சம்பவம் குறித்து அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து னத்தின்சன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார், நதி ஒடின்சன் கீழே குதிப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். நதி ஒடின்சனின் முகநூல் பக்கம், தாய்லாந்தின் பல்வேறு இடங்களிலிருந்து 'ஸ்கைடைவிங்', 'பேஸ் ஜம்பிங்' வீடியோக்களை கொண்டுள்ளது.

'ஸ்கைடைவிங்'-கில் சாகசம் புரிந்துவந்த வீரர், பாராசூட் விரியாமல் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அவரது நண்பர்கள், முகநூல் பின் தொடர்பாளர்களை அதிர்ச்சியடையச் வைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sky diver nathy odinsan died in brittan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->