ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மரணமடைந்ததையடுத்து ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் புதிய அதிபராக தேர்வு.! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மரணமடைந்ததையடுத்து நீண்டகால ஆட்சியாளரான ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகின் இரண்டாவது பணக்கார அரசரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் உடல்நிலை குறைவால் நேற்று உயிரிழந்தார்.

அந்நாட்டில் அதிபரின் மறைவையொட்டி 40 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிபரின் இறுதி சடங்கு முடிந்தவுடன் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டநாள் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் புதிய அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் 7 அமீரகங்களின் ஆட்சியாளர்களை கொண்ட பெடரல் சுப்ரீம் கவுன்சிலின் கீழ் உள்ள உறுப்பினர்களால் அதிபராக ஷேக் முகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sheikh Mohammed bin selected as UAE President


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->