பிரதமர் மோடிக்கு வீடியோவில் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி: வீடியோவை வெளியிட்ட ஷேக் ஹசீனாவின் மகன்..!
Sheikh Hasinas son releases video of Lashkar terrorist publicly threatening Prime Minister Modi
பாகிஸ்தானின் அணு ஆயுத ஆண்டு விழாவில் பிரதமர் மோடிக்கு லஷ்கர் தலைவன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளான். இந்த வீடியோவை வங்கதேச முன்னாள் பிரதமரின் மகன் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த வன்முறை போராட்டங்களால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. போராட்ட கும்பல் அவரது அரண்மனையை முற்றுகையிட்டதால், அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
தற்போது அவரது அவாமி லீக் கட்சி வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே வாங்க தேசத்தில்,அமைதிக்கு நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், வங்கதேசத்தில் பொது தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜோய் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி முசம்மில் ஹாஷ்மி இந்தியாவை மிரட்டுவதாகவும், கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் கலவரத்தில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அத்துடன், ‘காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவன், என் தாயாரான வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியதாக தனது உரையில் கூறுகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் அரசியல் முகமாகக் கருதப்படும் பாகிஸ்தான் மர்காஸி முஸ்லிம் லீக் அமைப்பால் கடந்த 28-ஆம் தேதி பாகிஸ்தானில் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
இதில், பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹாஷ்மி, இந்தியாவை எதிரி என்று குறிப்பிட்டு, பிரதமர் மோடிக்கு நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளான். அத்துடன், அங்கு நடந்த நிகழ்வில் பேசிய அவன், ‘நீங்கள் தோட்டாக்களால் எங்களை பயமுறுத்த முயல்கின்றீர்கள்; மோடி அவர்களே உங்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறோம்; உங்களுடைய ஏவுகணைகளுக்கு எங்களது குழந்தைகள் கூட பயப்படவில்லை. உங்களது தோட்டாக்களுக்கு நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்..? உங்களால் எங்களை பயமுறுத்த முடியாது.
உங்களுடைய முன்னோர்களாலும் அது முடியவில்லை. இந்தியாவின் வரலாற்றைப் பாருங்கள்; உங்களது முன்னோர்களின் வரலாற்றைப் பாருங்கள்; உங்களது முன்னோர்கள் எப்போதும் எங்களுக்கு முன் மண்டியிடுவார்கள்; நீயும் அப்படித்தான் செய்வாய்’ என்று அந்த வீடியோவில் ஹாஷ்மி பேசியுள்ளான்.
English Summary
Sheikh Hasinas son releases video of Lashkar terrorist publicly threatening Prime Minister Modi