ரஷ்யாவின் தாக்குதலால் உணவுப் பற்றாக்குறையால் திண்டாடும் உக்ரைன் மக்கள்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் உணவு பற்றாக்குறையால் மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யப் படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களை தாக்கி அழித்து வருகின்றன.

இந்நிலையில் தொடர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நகரங்களில் தொழில் மற்றும் அன்றாட தேவைகளை இழந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் உருக்குலைந்த வீடுகளில் வாழும் மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பெற போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உக்ரைன் போலீசார் வழங்கிய உணவு பொட்டலங்களை வாங்குவதற்கு மக்கள் திரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் லுஹான்ஸ்க் மற்றும் லிஸிசான்ஸ்க் பகுதிகளில் போலீசார் தொடர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Severe food crisis in Ukraine due to war


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->