ஈரானில் தலைதூக்கும் விஷவாயு பிரச்சனை.! ஒரே நாளில் 30 க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரான் நாட்டின் புனித நகரமான கோம் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் பெண்கள் பள்ளிக்கு சென்று கல்வி கற்பதை நிறுத்த சிறுமிகளுக்குச் சிலர் விஷம் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடையாளம் தெரியாத சிலர் திட்டமிட்டு செய்வதை துணை சுகாதார அமைச்சர் யூனஸ் பனாஹி உறுதிப்படுத்தினார். இதையடுத்து அந்த நாட்டு அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

ஏற்கனவே ஈரானில் ஹிஜாப் தொடர்பான போராட்டங்கள் நடந்து வந்தது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் பள்ளி மாணவிகள் மீது விஷவாயு செலுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 

இதைத்தொடர்ந்து, நாட்டில் ஹமேடன், ஜான்ஜன், மேற்கு அஜர்பை ஜான், பார்ஸ், அல்போர்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் இருந்து சுவாச கோளாறு உள்ளிட்ட பல பிரசனைகளால் ஏராளமான மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஈரான் நாட்டில் 10 மாகாணங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஈரான் நாட்டில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school students addmited hospital for poison gas attack


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->