பணி நீக்கத்தில் களமிறங்கிய சாம்சங் - ஊழியர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தப் பணி நீக்கத்தால் உலக அளவில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு அபாயத்தை சந்திக்க நேரிடும். 

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள பல்வேறு குழுக்களில் உள்ள ஊழியர்களுடன் சாம்சங் நிறுவனம் சார்பில் தனி சந்திப்பு நடத்தப்பட்டது. மேலும் அவர்களிடம் பணிநீக்கங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சாம்சங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது:- ” சாம்சங் நிறுவனம் அதன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக வழக்கமான பணியாளர்களை சரிசெய்து வருகின்றன. 

எந்தவொரு குறிப்பிட்ட பதவிகளுக்கும் பதவி காலம் தொடர்பாக நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை. சாம்சங் பங்குகள் இந்த ஆண்டு 20% க்கும் அதிகமாக சரிந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்தார்.

அதாவது, சாம்சங் நிறுவனம் அதன் மொத்த ஊழியர்களான 147,000 பேரில் 10% க்கும் குறைவாகவே குறைக்க வாய்ப்புள்ளது. அதற்கு காரணம் நிறுவனம் மேலாண்மை மற்றும் ஆதரவு செயல்பாடுகளை குறைக்கும் போது உற்பத்தி வேலைகளை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samsung company announce employee lay off


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->