உக்ரைனை முழுமையாக அழிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை - ரஷ்ய அதிபர் புடின் - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் இடையிலான உச்சி மாநாடு, கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் தலைமையில் தலைநகர் அஸ்தானாவில் தொடங்கியது.

இந்த மாநாட்டில் அஜர்பைஜான், ஈராக், ஈரான், கத்தார், கிர்கிஸ்தான், பாலஸ்தீனம், ரஷ்யா, தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன.

இதையடுத்து மாநாட்டில் பங்கேற்று செய்தியாளரிடம் பேசிய ரஷ்யா அதிபர் புடின், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரில் சீனா மற்றும் இந்தியாவின் நடுநிலையான நிலைப்பாட்டை மதிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் மீதான போருக்கு வருத்தப்படவில்லை என்றும், ரஷ்யா சரியான நடவடிக்கையே எடுத்து வருகிறது என்றும், உக்ரைனை முழுமையாக அழிக்கும் நோக்கம் இல்லை என்றும், உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தற்போதைக்கு இல்லை எனவும் அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian President Putin has no intention of completely destroying Ukraine


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->