ரஷியாவில் எரிவாயு குழாய் தீ விபத்து - மூன்று பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து பத்து மாதங்களை கடந்து வருகிறது. இந்த போரினால் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக இயங்கி வருகின்றனர். 

இதனால், ரஷியா ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதியை குறைத்தது. இருந்தாலும், எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்படாமல், குழாய் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 

அதன் படி, 1980-ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட குழாய்கள், உக்ரைன் எல்லையை ஓட்டி அமைந்துள்ள ரஷியாவின் சுட்ஜா நகர் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவைக் கொண்டு செல்கிறது. இந்த குழாய் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து செல்கிறது. 

இந்நிலையில் நேற்று முதினம் ரஷியா நாட்டின் உள்ள சுவாஷியா பிராந்தியத்தில் இருக்கும் எரிவாயு குழாயில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது  எதிர்பாராத விதமாக எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு வெடித்ததில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதில், பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த தீ விபத்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு ஏற்றுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russia ukraine border gas pipeline fire accident three peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->