அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல்.! பாதுகாப்பை பலப்படுத்த ரஷ்ய அதிபர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் கடந்த ஓர் ஆண்டை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ரஷ்யாவின் தெற்கும் மற்றும் மேற்கு பகுதிகளில் அடுத்தடுத்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ரஷ்யாவின் பெல்கொரோட் பிராந்தியத்தில் மூன்று டோன்கள் தாக்குதல் நடத்தியதில் கட்டிடங்கள் கார்கள், சேதமடைந்ததாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து ரஷ்யா தலைநகரிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதி அருகே ஒரு ட்ரோன் விழுந்த நொறுங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் பிரியான்ஸ் பிராந்தியத்துக்குள் நுழைந்த உக்ரைன் ட்ரோனி ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாகவும் அப்பிராந்திய ஆளுநர் அலெக்ஸாண்டர் போகோமாஸ் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின், எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ட்ரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டி வரும் நிலையில், உக்ரைன் தரப்பில் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia president putin ordered to beef up security in wake of subsequent drone attack


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->