ரஷியா : காஸ்பியன் கடகரையில் கரை ஒதுங்கும் சீல்களால் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


தெற்கு ரஷிய நாட்டில் உள்ள காஸ்பியன் கடற்கரையில் கிட்டத்தட்ட 2,500 கடல் சீல்கள் உயிரிழந்து கரையில் ஒதுங்கின. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, 

"காஸ்பியன் கடல் பகுதியில் சுமார் 3 லட்சம் சீல்கள் வரை இருக்கின்றன. ஏற்கெனவே ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் சீல்கள் இறந்திருக்கும் சம்பவம் பல முறை நடந்துள்ளது.

ஆனால், இவ்வளவு சீல்கள் உயிரிழப்பதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை அவை இயற்கையாக கூட இறந்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். 

முதலில் 700 சீல்கள் இறந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் 2,500 சீல்கள் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, காஸ்பியன் சுற்றுச்சூழல் மைய தலைவர் ஜார் காபிசோவ் தெரிவித்ததாவது, 

இந்த சீல்கள் அனைத்தும் ஒரு வரத்திற்கு முன்பு இறந்திருக்கலாம். இந்த சீல்கள் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russia kashbiyan sea two thousand five hundrad seals died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->