பின்லாந்துக்கு மின் விநியோகத்தை நிறுத்த ரஷ்யா முடிவு.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்தப் போர் மூள்வதற்கு உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய விரும்பியது காரணமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்ய நாட்டுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடான பின்லாந்து நேட்டோ அமைப்புடன் இணைய உறுதியாக உள்ளதை கண்டித்து பின்லாந்துக்கு வழங்கிவரும் அனைத்து மின்சார விநியோகத்தையும் ரஷ்யா நிறுத்த உள்ளது.

இதனையடுத்து பின்லாந்து நிர்வாகம் ரஷ்யாவுடன் இருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், மேலும் இதனை ஈடுகட்ட உள்நாட்டிலேயே மின்சாரம் தயாரிக்கவும் மற்றும் ஸ்வீடனிலிருந்து இருந்து மின்சாரம் பெறப்பட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுவரை வாங்கிய மின்சாரத்திற்கு பணம் செலுத்த முடியாது என்றும் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia cuts electricity to finland


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->