உக்ரைன் படைகள் அமெரிக்க ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் - ரஷியா குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனின் டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜியா ஆகிய 4 வாகனங்களை கைப்பற்றிய ரஷ்யா அவற்றை தன்னுடன் இணைத்து கொண்டது. 

இவற்றில் ஒன்றான கெர்சன் நகரில் உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கெர்சன் நகருக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ரஷ்யாவின் துணை கவர்னர் கிரில் ஸ்டிரெமவுசவ் தெரிவித்ததாவது, ரஷ்யாவுடன் இணைந்த பகுதிகளில் இருந்து வெளியேற கூடிய பொதுமக்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா வினியோகித்த ஹிமர்ஸ் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துகிறது என்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஒப்புக்கொண்ட நிலையில், குடிமக்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia accuses Ukraine attack using american missiles


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->