நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள வெனிசுலா: கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பிறந்து சில தினங்களேயான பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்பு; நெகிழ்ச்சி வீடியோ..! - Seithipunal
Seithipunal


வெனிசுலாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அந்நாடு நிலைகுலைந்து போயுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி, பிறந்து 18 நாளே ஆன குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசயமும் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகி பார்ப்போரின் மனதை நெகிழ வைத்துள்ளது.

கடந்த புதன்கிழமையன்று, வெனிசுவேலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. கட்டட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, லா குவைரா பகுதியில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த பச்சிளம் குழந்தையும் அதன் தாயும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் இருவரும் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட தருணம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

அத்துடன், மற்றுமொரு கட்டட இடிபாடுகளுக்குச் சிக்கிய 10 மாத குழந்தை வந்தது பாதுகாப்புடன் மீட்கப்பட்ட்டுள்ளது. லா குவைராவில், 04 வயது மகன் மற்றும் தம்பதி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 26 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டதோடு, கரபல்லேடாவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒரு பெண்ணை, மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மேலும், மைகெட்டியாவில், கிட்டத்தட்ட 72 மணி நேரமாக இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த ஒரு மூதாட்டியை ஸ்பெயினின் ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் மீட்டுள்ளனர். தற்போது வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 400-ஐ கடந்துள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவை வெளிப்படுத்தும் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Resilient video of a newborn baby trapped in a collapsed building in Venezuela being safely rescued


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->