ரஷ்ய அதிபர் தேர்தல்; மீண்டும் தனது செல்வாக்கை நிரூபித்துள்ள விளாடிமிர் புதின்; வெற்றிமுகத்தில் ஆளும் கட்சி; தவிடுபொடியான எதிர்க்கட்சிகள்..! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் போர் நடந்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது போர் நடத்தி வருகிறது. இந்த போரால், ரஷ்யாவிலும், உக்ரைனிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், தங்களது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. 

இதனைத்தொடர்ந்து, இந்த இருநாட்டு போருக்கு, அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியினர் பலரும், தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதன் காரணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செல்வாக்கு குறைக்கக்கூடும் என்ற எண்ணம், உலக நாடுகள் மத்தியில் எழுந்திருந்தது. இதனால், ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தலில், தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு புதின் தள்ளப்பட்டிருந்தார். 

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை, ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான ஸ்டேட் டுமா (State Duma) தேர்தல் நடைபெற்றது. தற்போது, அந்த தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற. அதில், புதினின் யுனைடெட் ரஷ்யா கட்சி, வெற்றியை நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 90.43 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், பதிவான வாக்குகளில் புதினின் யுனைடெட் ரஷ்யா கட்சி 57.86% வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளது. யுனைடெட் ரஷ்யா கட்சியை எதிர்த்து வலுவான மாற்று சக்திகள் இல்லாதபோதிலும், இதர சில கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இடங்களைப் பெற்றுள்ளன. 

அதன்படி, ரஷ்யக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சி 13.84% வாக்குகளையும், லிபரல் டெமாக்ரேட்டிக் கட்சி 8.9 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. புதிய மக்கள் கட்சி 7.94 சதவீத வாக்குகளையும், A Just Russia என்ற கட்சி 4.95 சதவீத வாக்குகளையும் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய மக்கள் கட்சிக்கு மக்கள் அளிக்கும் வாக்குகள், பொருளாதார நெருக்கடி மற்றும் போரின் தாக்கத்தால் புதினின் மீதுள்ள அமைதியான எதிர்ப்பின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Putin wins Russian presidential election again


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->