பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்துள்ளார் பிரதமர் மோடி..!
Prime Minister Modi meets British King Charles III
அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து பேசியநிலையில், இரு நாடுகளுக்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதனை தொடர்ந்து, மோடி அந்நாட்டு மன்னர் சார்லசை சந்தித்து பேசியுள்ளார். சாண்ட்ரிங்ஹாம் இல்லத்தில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை பிரதமர் மோடி சந்தித்துள்ளார். அங்கு மோடியை சார்லஸ் உற்சாகமாக வரவேற்றார்.
அப்போது, பிரதமர் மோடி மரக்கன்று ஒன்றை சார்லசுக்கு வழங்கினார். சுற்றுச்சூழலை ஊக்குவிக்க பிரதமர் தொடங்கி வைத்த “Ek Ped Maa Ke Naam” திட்டத்தில் மன்னர் ஈர்க்கப்பட்டார் என அரச குடும்பம் தெரிவித்துள்ளது.
English Summary
Prime Minister Modi meets British King Charles III